Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடிப்படைக் கூட தெரியாத முதலமைச்சர்… அன்புமணி ராமதாஸ் காட்டம்…
    தமிழ்நாடு

    அடிப்படைக் கூட தெரியாத முதலமைச்சர்… அன்புமணி ராமதாஸ் காட்டம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2025Updated:July 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ”தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.

    வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகம், பீகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

    வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்…….
    சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்….. அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிறந்தநாள் காணும் எம்.எஸ்.தோனி… வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்…
    Next Article இந்தியாவிடம் வீழ்ந்த இங்கிலாந்து… காரணம் என்ன? கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி…
    Editor TN Talks

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.