பாமகவில் ராமதாஸ் , அன்புமணி இடையே உட்கட்சி மோதல் வலுத்து வரும் நிலையில் நடைபயணம் சென்று தொண்டர்களை சந்திக்க அன்புமணி முடிவு
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபயணம் தொடங்க அன்புமணி முடிவு
முதல் கட்ட நடைபயணத்தில் பாமகவிற்கு செல்வாக்கு மிக்க வட தமிழக மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்கிறார் அன்புமணி
(( தொகுதி தலைநகரின் முக்கிய கடைத்தெரு பகுதியில் நடந்து சென்று துண்டுச் சீட்டு வழங்குவது , ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு பெரிய கிராமங்களில் நடை பயணம் செல்வது என திட்டமிடப்பட்டுள்ளது ))
தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு நடைபயணம் செல்ல உள்ளதாக கடந்த வாரம் நிர்வாகிகளை சந்தித்தபோது அன்புமணி தெரிவித்திருந்தார்
வரும் 15 ம் தேதி முதல் மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களை அன்புமணி சந்திக்கிறார்
மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்த பின் ஜூலை 25 முதல் நடைபயணம் சொல்கிறார் அன்புமணி
அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பொறுப்புகளில் இருந்து விடுவித்து வரும் நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட அன்புமணி திட்டம்