சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினரின் நிறுவன நிகழ்வில் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். அப்போது தனது உரையின் இறுதியில் சீன நாட்டுக் குட்டி கதை ஒன்றை அண்ணாமலை கூறினார்.

சீனாவில் அருகருகே வசித்த இரண்டு விவசாயிகளில் ஒருவர் ஒரு குதிரையையும், மற்றொருவர் இரண்டு குதிரையையும் வைத்திருந்தார்.

ஒருநாள் ஒற்றைக் குதிரையை மட்டுமே வைத்திருந்த விவசாயின் குதிரை எங்கோ ஓடி விட்டது. உடனே அந்த ஊர்க்காரர்கள் விவசாயியின் குடிலுக்கு வந்து நீங்கள் வைத்திருந்த ஒரே குதிரையும் இப்படி ஓடிவிட்டதே என ஆறுதல் கூறினர் .

அதற்கு அந்த விவசாயி பரவாயில்லை விடுங்கள்… இதுவும் கடந்து போகும் என்றார்.

அடுத்த சில நாட்களில் அந்த பகுதியின் மன்னர் இன்னொரு நாட்டு மன்னரோடு சண்டைக்குச் சென்றார் . அப்போது மன்னர் யாரிடமெல்லாம் குதிரை இருக்கிறதோ அவர்களெல்லாம் போருக்கு வரவேண்டும் என்றார்.

எனவே இரண்டு குதிரை வைத்திருந்த விவசாயி போருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். போருக்கு சென்ற அவருக்கு இரண்டு கால்களும் முறிந்து விட்டன.

அப்போது ஒற்றை குதிரை வைத்திருந்த விவசாயியின் வீட்டிற்கு வந்த ஊர்க்காரர்கள் நல்ல வேளை உங்கள் குதிரை காணாமல் போய்விட்டது. இல்லை என்றால் நீங்கள் போருக்கு சென்று காயம் பட்டிருக்க கூடும் எனும் கூறினர்.

அப்போது அந்த விவசாயி இதுவும் கடந்து போகும் என்றார்.

சில நாள் கழித்து ஓடிப்போன குதிரை மற்றொரு குதிரையோடு இரண்டு குதிரையாக அந்த விவசாயியின் குடிலுக்கு திரும்பியது . அப்போது வந்த ஊர்க்காரர்கள் ஒரு குதிரை சென்று, இப்போது இரண்டு குதிரையாக வந்துவிட்டதே, என்று அவருக்கு வாழ்த்து கூறினர்.

அப்போதும் அந்த விவசாயி இதுவும் கடந்து போகும் என்றார்.

அந்த விவசாயின் மகன் புதிதாக வந்த குதிரையில் ஏறி சவாரி சென்றபோது அவர் கீழே விழுந்து இடுப்பில் அடிபடுகிறது. மீண்டும் விவசாயின் வீட்டுக்கு வந்த ஊர்காரர்கள் குதிரை திரும்பி வராமலேயே இருந்திருக்கலாம் போல என அவருக்கு ஆறுதல் கூறினர் .

அப்போதும் அவர் இதுவும் கடந்து போகும் என்றாராம்…

இந்த கதையை கூறிய அண்ணாமலை நம் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை பார்ப்போம் , அப்போதெல்லாம் இதுவும் கடந்து போகும் என கூறி கடந்து செல்ல வேண்டும் .

இன்று நடக்கும் விசயங்களில் எது நாளை நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறும் என நாம் கணிக்க முடியாது. அவை அனைத்தும் நம் முன்வினைப் பயனால் நடப்பவை.

இன்று நமக்கு நடந்த ஒன்றை கெட்டது என நாம் நினைத்திருப்போம். ஆனால் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது நமக்கு நடந்த பெரிய நல்ல விசயமே அதுவாகத்தான் இருக்கும்.

இன்று நல்லது என நினைத்திருக்கும் ஒன்றை அடுத்த 5 ஆண்டுகள் கடந்து பார்க்கும்போது நமக்கு நடந்த மிகப்பெரிய கெட்டது அதுவாகத்தான் இருக்கக் கூடும்.

நான் கூறிய சீனக்கதையை நினைவில் வைத்துக் கொண்டு எது நடந்தாலும் அதை புன்னகையோடு , கம்பீரத்தோடு , வெற்றி நடையோடு நடந்து கடந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும் .

என அண்ணாமலை உரையாற்றினார்.

Share.
Leave A Reply

Exit mobile version