தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவின் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் காண்கிறது. மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுகிறார்.
தனது மனைவி கயல்விழியை மாற்று வேட்பாளராகவும் அவர் முன்மொழிந்துள்ளார். இருவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று, வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். ஸ்டாலினும், விஜய்யும் கட்சி நிர்வாகிகளோடு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சீமான் தாய் மற்றும் மனைவியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெகவின் ஆதவ் அர்ஜுனாவுன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
