Close Menu
    What's Hot

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    Editor web3By Editor web3April 3, 2026Updated:April 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp candidate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மண்டலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி போட்டியிடுகிறார். பத்மநாபபுரம் தொகுதியில் ரமேஷ் மற்றும் குளச்சல் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மேற்கு மாவட்ட நிர்வாகி நீக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், தஞ்சாவூர் தொகுதிக்கு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருப்பத்தூர் போன்ற தொகுதிகளிலும் கட்சி தனது வேட்பாளர்களை உறுதி செய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

    பாஜக வேட்பாளர் பட்டியல்:

    ஆவடி – ராஜசிம்மா மகேந்திரா
    மயிலாப்பூர் – தமிழிசை செளந்திரராஜன்
    அவினாசி ( தனி) – எல். முருகன்
    கோவை வடக்கு – வானதி ஸ்ரீனிவாசன்
    தளி – நாகேஷ் குமார்
    சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
    ராசிபுரம் ( தனி) – பிரேம்குமார்
    மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்
    உதகை – போஜராஜன்
    நாகர்கோவில் – காந்தி
    திருவண்ணாமலை – ஏழுமலை
    திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
    திருவாரூர் – கோவி சந்துரு
    தஞ்சாவூர் – முருகானந்தம்
    கந்தர்வகோட்டை ( தனி) – உதயகுமார்
    புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
    அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
    திருப்பத்தூர் – திருமாறன்
    மானாமதுரை ( தனி) – பாலகணபதி
    மதுரை தெற்கு – இராம சீனிவாசன்
    ராமநாதபுரம் – நாகேந்திரன்
    திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
    வாசுதேவநல்லூர் ( தனி) – ஆனந்தன் அய்யாசாமி
    ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
    குளச்சல் – சிவக்குமார்
    பத்மநாபபுரம் – ரமேஷ்
    விளவங்கோடு – விஜயதாரணி

    பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

    கடந்த முறை கோவை தெற்கில் வென்ற வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். கடந்த முறை நாகர்கோவிலில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக கிருத்திகா சிவகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.
    Next Article அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    April 3, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    Trending Posts

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    April 3, 2026

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    April 3, 2026

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    April 3, 2026

    சர்ச்சை கேட்ச்!. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினாரா அபிஷேக் சர்மா?. ஷாக் கொடுத்த பிசிசிஐ!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.