வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதுபோன்ற சூழலில் அங்குள்ள துணைத்தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச துணைத்தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்தது.
உடனே வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் அது வெறும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாகவும் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
