சுதந்திர தினம் மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறை வருவதால், 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
சுதந்திர தினம் அடுத்த வெள்ளிக் கிழமை கொண்டாடப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வர இருப்பதால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 14-ம் தேதி சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.
இதேப் போல், 14,16 ஆகிய தேதிகளில் மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வரை சிறாப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேப் போல் 17-ம் தேதி நாகர்கோவில்-தாம்பரம், 18-ம் தேதி தாம்பரம்-நாகர்கோவில், 14-ம் தேதி சென்னை எழும்பூர் – செங்கோட்டை என சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
