Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
    தமிழ்நாடு

    4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை எனவும் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து ஜூலை 14 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல; இதற்கு எந்த சட்ட பலமும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை என்றும் அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை எனக் கூறி வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவின் ஸ்லீப்பர் செல் துரைவைகோ – மல்லை சத்யா குற்றச்சாட்டு
    Next Article முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவு தினம்… முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி….
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.