திருச்செந்தூ ரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவில்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 06.15 மணி முதல் காலை 06.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை விட நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என என சீராய்வு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் கோவில் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், இதே போன்று கோரிக்கையுடன் உச்சநீமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது இந்த மனு ஆடம்பரமான மனு என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என வாதிட்டனர்.
இதை தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் கோவில் ஆகமம், மரபுகளை பின்பற்ற வேண்டும். இதில் எங்களுக்கு எந்த சுய நலமும் இல்லை என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதிகள், கோவில் பழக்க வழக்கம், மரபுகளை பின் பற்றி கும்பாபிஷேக நேரம் முடிவு செய்யப்பட்டு உள்ளதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.