தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் இன்று (மே 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.