Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் கோலாகலம்
    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் கோலாகலம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvmm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலையார் கோயி​லில் நடை​பெறும் பிரசித்தி பெற்ற கார்த்​திகை தீப திரு​விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

    திரு​விழா​வின் 7-ம் நாள் உற்​சவ​மான நேற்று மகா தேரோட்டம் கோலாகரமாக நடை​பெற்​றது. தேரோட்​டத்​தையொட்டி அதி​காலை கோயில் நடை திறக்​கப்​பட்டு சுவாமிக்​குச் சிறப்பு அபிஷேக ஆராதனை​கள் நடைபெற்றன.

    பின்​னர், ராஜகோபுரம் எதிரே உள்ள அலங்​கார மண்​டபத்தில் சிறப்பு அலங்​காரத்​தில் பஞ்ச மூர்த்​தி​களான விநாயகர், வள்ளி தெய்​வானை சமேத முரு​கர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்​வரர் அவர்​களுக்​குரிய ரதங்​களில் எழுந்​தருளினர்.

    அதைத்​தொடர்ந்து பஞ்​சரதங்​கள் வீதி​யுலா​வின் தொடக்​கத்​தில் முதலா​வ​தாக விநாயகர் தேர் காலை 7.10 மணிக்​குப் புறப்​பட்​டது. இதில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்​துச் சென்​றனர். பின்​னர் காலை 11 மணி அளவில் முரு​கர் தேர் புறப்​பட்​டது. இதில் வள்ளி தெய்​வானை சமேத முரு​கர் எழுந்​தருளி​னார்.

    அதைத்​தொடர்ந்து சுவாமி தேர் என அழைக்​கப்​படும் மகா ரதம் மாலை 4 மணிக்​குத் தொடங்​கியது. அப்​போது மாட​வீ​தி​யில் திரண்​டிருந்த பக்​தர்​கள் அண்​ணா​மலை​யாருக்கு ‘அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்​டபடி வடம் பிடித்து தேரை இழுத்​துச் சென்​றனர். பக்​தர்​கள் வெள்​ளத்​தில் உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார் மகா ரதத்​தில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

    இதில் சட்டப்பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, மாவட்ட ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ், வேலூர் சரக டிஐஜி தர்​ம​ராஜ், திமுக மாநில மருத்​து​வர் அணி துணைத் தலை​வர் எ.வ.வே.கம்​பன் மற்​றும் முக்​கிய பிர​முகர்கள் தேர் வடம் பிடித்து இழுத்​தனர்.

    மாட​வீ​தி​களில் வலம் வந்த மகாரதம் இரவு 10.30 மணி அளவில் நிலைக்கு வந்​தது. அதன்​பின்​னர், 11 மணி அளவில் பராசக்தி அம்​மன் அலங்​காரரூபத்​தில் எழுந்​தருளி அம்​மன் தேரோட்டம் நடை​பெற்​றது. அம்​மன் தேரை தேரோட்​டத்​தின் மரபின்​படி பெண்​கள் மட்​டுமே வடம் பிடித்து இழுத்​துச் சென்​றனர். நிறை​வாக சண்​டிகேஸ்​வரர் தேரோட்டம் நடை​பெற்​றது.

    இதன்படி விடிய விடிய வீதி​யுலா நடை​பெற்​றது. தேரோட்​டத்​தையொட்டி 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​பு பணி்யில் ஈடுபட்டனர். திரு​விழா​வின் 8-ம் நாள் உற்​சவ​மான இன்று காலை வெள்ளி மூஷிக வாக​னத்​தில் விநாயகர், குதிரை வாக​னத்​தில் சந்​திரசேகரர் பவனி மற்​றும்.

    மாலை 4 மணிக்கு தங்​கமேரு வாக​னத்​தில்​ பிச்​சாண்​ட​வர்​ உற்​சவம்​ நடைபெறுகிறது. இரவு பெரிய குதிரை வாகனத்தில் அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருள்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
    Next Article தெலுங்கு ‘வாரணாசி’ படத்தலைப்பில் மாற்றம்!
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.