Close Menu
    What's Hot

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?
    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    Editor web3By Editor web3February 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chennai budget
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை பட்ஜெட் 2026-27ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் துறை வாரியாக 90 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பூங்காக்களில் குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்களுடன் Inclusive Parks ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக 200 பூங்காக்ககளில் அறிவியல் பூர்வமாக தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஜார்ஜ்டவுன், கத்திவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, இராமாபுரம், ஸ்ரீராம் நகர், நங்கநல்லூர், என்.ஜி.ஓ காலனி ஆதம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் மாநகர பேருந்து பணிமனைகளை பொது தனியார் கூட்டாண்மையுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

    கடற்கரைகள், MRTS, மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் புறநகர் இரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நடைபாதை & மிதிவண்டிப் பாதை (Non-Motorised Transport Corridor) 25 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும்.

    சென்னை உயர்நீதிமன்றம் முதல் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் வரை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் வண்ணமயமான அலங்கார விளக்குகளுடன் பாரம்பரிய வழித்தடம் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் போன்ற இடங்களில் மின்வாகன மின்னேற்ற (Electric Vehicle Charging Stations) அமைக்கப்படும்.

    வெள்ள அபாயம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை திட்டமிட Urban Data Observatory Asset Management Software Digital Twin செயல்படுத்தப்படும். மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை கயிறு வழித்தடம் (Ropeway Car) பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் அமைக்கப்படும். ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதியதாக 6 இடங்களில் இரவு காப்பகங்கள் அமைக்கப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
    Next Article மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.