Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மன்னிப்புக்கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்..
    தமிழ்நாடு

    மன்னிப்புக்கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025Updated:July 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dinamani 2024 07 a51ac92b c772 4148 9f46 4edb30d2175c chennaicorporation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

    சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

    கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகி இருந்தார். இதனையடுத்து,ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும் நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை திரும்ப பெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை…
    Next Article கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு..
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.