Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025Updated:July 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1352759
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

    கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பியது.

    உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

    மேலும், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24 ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவரை கத்தியால் குத்தியவர்.. கடுமையான தண்டனை வழங்க மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்..
    Next Article அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு.. விஎச்பி மணியன் மனு தள்ளுபடி..
    Editor TN Talks

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.