சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுரணர்கள் சோதனையிட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான ஐடி வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரடல் விடப்பட்டது.
இதை தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 11ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரடல் விடடப்பட்டது. நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு செல்போன் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
உடனே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சீமான் வீட்டிற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.