முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்தி அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சரியாக சென்று தெரிகிறதா என கண்காணித்து அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சை ஓய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை,திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தி அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.