Close Menu
    What's Hot

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குறுவை சாகுபடி நெல் கொள்முதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
    தமிழ்நாடு

    குறுவை சாகுபடி நெல் கொள்முதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி,2024-2025 ஆம் ஆண்டில் 4.81 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நெல் கொள்முதல், நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில், குறுவை (கரீஃப்) பருவ நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.

    மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிலவரப்படி, நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் மொத்தம் 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,86,674 விவசாயிகளிடமிருந்து மொத்தம் 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.3,559 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் மொத்தம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போதைய நெல் கொள்முதல் பருவத்தில், வருகிற ஆகஸ்ட் 2026 வரை விற்பனைக்குரிய உபரி நெல் 98.25 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி அடிப்படையில் இது 66.81 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம், Kharif Marketing Season (KMS) 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்கை 20 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்குமாறு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    தற்போது மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, KMS 2025- 2026-க்கான அரிசி கொள்முதல் இலக்கை வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை 16 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் சாதனை அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, KMS 2025-2026-க்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை, கரீஃப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு:

    இரண்டாவதாக, காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக நிர்ணயிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 25 முதல் 28 அக்டோபர் வரை மூன்று குழுக்கள் தமிழ்நாட்டில் களப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால், தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.

    கரீஃப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் 16 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு குறித்த உத்தரவை விரைவாக வழங்கிட வேண்டும்.

    செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி, மாநில அரசு அக்டோபர் 7 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது. தற்போதைய நிலவரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணையதளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர். இவற்றில் இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகிறது. எனவே, தற்போதுள்ள 25 கிலோ FRK சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும். மாதிரி தொகுதி அளவை 10 MT-இலிருந்து 25 MT ஆக BIS தரநிலைகளுக்கு (ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறையும். இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும். மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இப்பரிந்துரைகளை பரிசீலனை செய்து நெல் அரவை ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் விநியோகத்தை எளிதாக்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டும். இதன்மூலம் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான காலம் கணிசமாகக் குறையும். தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி இவ்விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவுகளை எடுத்திட வேண்டும்’ என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
    Next Article வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

    December 26, 2025

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.4 ஆக பதிவு

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.