தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகி உள்ள கார் உற்பத்தி ஆலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை, இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை முதலமைச்சர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version