கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்றிரவு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று கொண்ட கும்பல் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி விட்டு கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஆண் நண்பர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு பீளமேடு போலீசார் விரைந்தனர்.
அப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் காரில் இருந்து மாணவியின் துப்பட்டா, ஹேண்ட் பேக், செருப்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
