கோவை செட்டிபாளையம் பேரூராட்சி தி.மு.க தலைவர் மற்றும் துணைத் தலைவர் சேர்ந்து போர் போடும் இயந்திரம் இல்லாமல், போர் போட்டதாக காண்பித்து மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 2 – வது வார்டில் ஜேசிபி இயந்திரம் மூலமாக 7 அடிக்கு மட்டுமே போர் போட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை, செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 7 அடிக்கு மட்டுமே போர் போட்டு உள்ளதாகவும், குறிப்பாக போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜே.சி.பி வைத்து போர் போட்டு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு ஒதுக்கிய மூன்று லட்சம் ரூபாய் நிதியில் இருந்து பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தராமல் கண் துடைப்புக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் போர் போட்டு கணக்கு காண்பித்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
7 அடிக்கு மட்டுமே போர் போட்டதால் இரண்டாவது வார்டு மற்றும் அதனை இணைக்கும் 15 வது பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய முறையில் போர் போட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.