கோவை மாநகர ஆணையராக இருக்கும் சரவணசுந்தர், திமுகவின் மாவட்ட செயலாளர் போல செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக அதிமுகவினர் பேனர் வைக்க காவல்துறையினர் அனுமதியளித்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திமுக அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கோவை உக்கடம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் சட்டையை கழட்டி விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டல் விடுத்தார். மேலும் சக காவலர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நீ என்ன ரவுடியா என்று கேட்டு பொதுவெளியில் காவல்துறை அதிகாரியை கேவலபடுத்தினார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், திமுக பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ்மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது, நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், கோவை மாநகர மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் போன்று செயல்படுவதாக எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version