அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் டிடிவி தினகரன் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலாவை பொதுச் செயலாளராகவும், டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பின் ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த எடப்பாடி பழனிச்சாமி வீடு டிடிவி தினகரன் அந்த பதிவியிலிருந்து தூக்கினார். மேலும் டிடிவி தினகரனும், சசிகலாவும் மீண்டும் ஆதிமுகவுக்குள் வராமலும் அவர் பார்த்துக் கொண்டார்.. எனவே, பழனிச்சாமியை துரோகி எனவும், அவரை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் டிடிவி தினகரன் பேசிவந்தார்.
அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது. அந்த கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவும் இணையவே டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக சேர்ந்தனர். ‘ எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டை.. நாங்கள் இன்று திட்டிக்குவோம்.. நாளைக்கு சேர்ந்துக்குவோம்’ என்று வசனம் பேசினார் டிடிவி தினகரன்..
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் நிலையில் அந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றிபெற்ற நிலையில் தற்போது அதே சின்னம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
