திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இரு இளைஞர்கள் ஒருவர் மற்றொருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த பகுதியில் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும்.. இன்று (06.06.2025) மதியம் 12 மணியளவில், இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இரு இளைஞர்கள் வாகனம் மோதி ஏற்பட்ட சலசலப்பால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் நேரில் சண்டையில் இறங்கினர்.
பத்து நிமிடங்களுக்கு மேலாக நடந்த சண்டையால் சுற்றுப்புறத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற போலீசாரில் ஒருவர் இருவரையும் தடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
விசாரணையில், அவர்கள் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த நசீர் மற்றும் அசார் என தெரியவந்தது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.