எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் சபாநாயகர் தனபால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் பி. தனபாலுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தேர்தலில் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. இதனால் தனபாலுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோனது. இதனால் இபிஎஸ் மீது தனபால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், 1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார்.
அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
