பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
இருப்பினும் இன்று அல்லது நாளை ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் எட்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகப்பு விநியோகத்தை சென்னையில் முதலமைச்சராக தொடங்கி வைக்க உள்ளார்
