தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 20-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிப் பார்வையாளர்கள் தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
