தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நேற்றுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கின . இந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல் சேலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் 1,00,974, குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட இதரர் 2,41,284, இரட்டை பதிவு 20,171 என மொத்தம் 3,62,439 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் எஸ்ஐஆர்-க்கு முன்னர் 8,98,362 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர்-க்கு பின்னர் இந்த எண்ணிக்கை 8,18,672 என 79,690 வாக்காளர்கள் குறைந்திருக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, ராசிபுரத்தில் 21,003, சேர்ந்தமங்கலத்தில் 28,326, நாமக்கல்லில் 36,130, பரமத்திவேலூரில் 23,770, திருச்செங்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 31,911 வாக்காளர்கள் என மொத்தம் 1.93 லட்சம் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 11,26,924 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 6.50 லட்சம் – 2,74,274
திண்டுக்கல்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 19,34,447 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 16,09,533 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 3,24,914
தஞ்சாவூர்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 20,98,561 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 18,92,058 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,06,593
திருச்சி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 23,68,967 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 20,37,180 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 3,31,787
நெல்லை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 14,20,334 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 12,03,368 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,16,966
விழுப்புரம்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 17,27,490 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 15,44,625 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,82,865
அரியலூர்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 5,30,890 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 5,06,522 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 24,368
தருமபுரி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 12,85,432 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 12,03,917 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 81,515
கடலூர்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 21,93,577 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 19,46,759 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,46,818
கிருஷ்ணகிரி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 16,80,626 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 15,06,077 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,74,549
நாகப்பட்டினம்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 5,67,730 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 5,10,392, நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 57,338
செங்கல்பட்டு: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 27,87,362 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 20,85,491 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 7,01,871
திருப்பூர்: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 24,44,929 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 18,81,144 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 5,63,785
திருவண்ணாமலை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 21,21,902 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 18,70,744 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,51,162
ராணிப்பேட்டை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 10,57,700 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 9,12,543 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,45,157
மதுரை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 27,40,631 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 23,60,157 நீக்கப்பட்ட வாக்காளர்கள் 3,80,474
கள்ளக்குறிச்சி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 11,60,607 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 10,76,278 நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 84,329
சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் – 40,04,694 எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் – 25,79,676, நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 14,25,018
