திருச்சியில் நடைபெறும் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார்.

இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையேயானது. சனாதனவாதிகள் ஒரு புறம் இருக்க திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பேசுவது போல் முகமூடி அணிந்து சிலர் உள்ளனர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது.

திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல. திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. வைகோவின் சமத்துவ நடைபயணத்தை, திராவிட நடைபயணம் என்றும் சொல்லலாம். திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூக நீதி, சமத்துவம்தான். பெரியார், அண்ணா, கலைஞர் போராடாமல் இருந்திருந்தால் நாம் இன்று இந்திவாலாக்களாகி இருப்போம் என்று பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version