Close Menu
    What's Hot

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உலர்சாம்பல் விவகாரம்- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
    தமிழ்நாடு

    உலர்சாம்பல் விவகாரம்- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    768 512 17105795 thumbnail 3x2 slm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் உள்பட ஐந்து அனல் மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 10 சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.

    சேலம் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல், மாவட்டத்தில் உள்ள முத்துகுமார் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்துக்கு, சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது எனவும், இந்த உலர் சாம்பல், அந்த நிறுவனம் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும்,
    இந்த முறைகேடு குறித்து, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு அளித்த மீது, நடவடிக்கை எடுக்க, மின்வாரிய இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என, சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் கோவிந்தராவ் நேரில் ஆஜராகி, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

    கடந்த ஜனவரி மாதம் அடுத்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தினந்தோறும் ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மனுதாரர் தெரிவித்த புகார் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, இலவசமாக வழங்கப்பட்ட உலர் சாம்பல், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளது குறித்து இந்த குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகம் நியமித்துள்ள குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்- அறிவுரைகள் வெளியீடு
    Next Article காலை உணவு திட்டம் – நயினார் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு இப்படியா மாட்டுறது? மதுரை பேராசிரியைக்கு புதுவையில் கிடைத்த பாடம்

    December 28, 2025

    சொத்து வரி பெயர் மாற்ற கட்டணம்.. அதிரடியாக அறிவித்த தமிழக அரசு! நகராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு?

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    ஜனவரி 2 முதல் வைகோ பாதயாத்திரை! மதிமுக அறிவிப்பு

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025

    141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.