Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»TNPSC: குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
    தமிழ்நாடு

    TNPSC: குரூப் 2 பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnpscs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கு, கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை பெற்றது.

    தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் ஆவர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-ல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் 15.7.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை இன்று (18.11.2025) வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆகும்.

    ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 2022-ம் ஆண்டு அறிவிக்கையில், ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8,784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது. ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.” என கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleX, Chatgpt போன்ற முக்கிய வலைதளங்கள் முடங்கியதன் காரணம் இதுதான் !!!
    Next Article சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.