நாமக்கல்லில், முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குளிர்காலத்தில் நுகர்வு அதிகரித்ததால், ஒரு முட்டை விலை 6 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்த முட்டை விலை தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம், மேலும் குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை, 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
