Close Menu
    What's Hot

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 
    தமிழ்நாடு

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    Editor web3By Editor web3March 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Major Changes election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகவும், அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல்  9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4 ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு  இணையானது என்றும் மேலும் 20 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இந்த 5 மாநில தேர்தல் திருவிழாவை காண வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்: 5 மாநிலங்களில் 2 கோடியே 18 லட்சத்து 807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் நகரங்களில் 30,967, கிராமப்புறங்களில் 44,065 என மொத்தமாக 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றும் சராசரியாக 756 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளதாகவும், தேனி மாவட்டத்தில் வருஷநாடு மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என்றும் எனவே, அங்குள்ள 5 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் தகுதிப்பெற்றுள்ளனர்.

    தேர்தலில் முதன்முறையாக முக்கிய மாற்றங்கள்: முதன்முறையாக வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம், சின்னம் கருப்பு வெள்ளையாக இல்லாமல் வண்ணத்தில் இடம்பெறும்.

    வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரியப்படுத்தப்படும்.

    வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

    மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள், வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

    8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு.

    வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

    பிஎல் ஓ-க்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    Next Article அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?
    Editor web3
    • Website

    Related Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    March 15, 2026

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    Trending Posts

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.