அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எத்தனை விபத்துகள்? எத்தனை உயிர்கள்? இன்னும் எத்தனை முறை தான் நான் சுட்டிக்காட்ட வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
பளபளக்கும் போட்டோஷூட் வீட்டுக்கு சென்றவர், ஒருமுறை உண்மையான பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வு செய்திருந்து பாதுகாப்பு குறித்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தால், இவ்விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளை கண்டுகொள்ளாத ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சின்னக்காமன்பாட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.