மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமான பணிகள் வருகிற ஜனவரி மாதம் முடிவடையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது.
மதுரையை சேர்ந்த. K.k. ரமேஷ், உயர்நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்ட து. கடந்த 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் , மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூபாய் 10கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஆனால் , 2019 ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பிறகு தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது.
எனவே, மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் தின மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் , மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்ட , கட்டுமான பணிகள் வருகிற ஜனவரி மாதம் முடிவடைந்து ஜனவரி 26 ம் தேதி மருத்துவ மனையிடம் உத்தேசமாக ஒப்படைக்கப்படும்.
அப்போது மனுதாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்று என வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பணிகள் தொடர்ந்து விரைவாக நடந்து வருகிறது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்திற்கு கட்டி முடிக்க வேண்டும்.
என நீதிமன்றம் உத்தரவிட இயலாது என கூறி வாழ்க்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.