தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை பாய்ந்தோடும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தோடு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து பிரதான ஷட்டர் வழியாக 2,243கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தரைப் பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. இதனால் கே.ஆர்.பி அணைக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version