தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தி வந்த குமுளியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இரு இளைஞர்கள் இடுக்கி கலால் துறையின் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி கலால் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கோதமங்கலத்தில் இருந்து குமுளி வந்த தனியார் பேருந்தை அடிமாலியில் சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா வை இளைஞர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் குமுளி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய அப்சல் மற்றும் ஆஷிக் என்பதும், சில்லரை விற்பனைக்காக தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தொடுபுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..