சென்னையில் தங்கம் விலை இன்று (31) அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 சரிந்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு போன்றவை உள்நாட்டு சந்தையில் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

 நேற்று காலை நேரத்தில் விலை குறைந்திருந்தாலும், மாலை நேர வர்த்தக முடிவில் சவரனுக்கு திடீரென ரூ.1,360 வரை அதிகரித்தது. இத்தகைய அதிரடி உயர்வால் அதிர்ச்சியில் இருந்த சாமானிய மக்களுக்கு, இன்றைய விலை சரிவு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பங்குச்சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக வரும் நாட்களிலும் தங்கம் விலையில் மாற்றங்கள் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ. 250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து 2,50,000க்கும் விற்பனையாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version