சென்னையில் இன்று (நவ. 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி காலங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலையின் உச்சமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டநிலையில், விலை சரிவடையத் தொடங்கியது. தங்கம் ஒரு சவரன் கடந்த மாதம் 28ம் தேதி ரூ.89,000-க்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,73,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், தங்கம் விலை இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.170-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.
