தங்கம் விலை இன்று (பிப்.6) சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960க்கும் ஒரு கிராம் ரூ200 குறைந்து ரூ.14,120க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.6,240 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.
இந்தநிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று(பிப்.6) சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960க்கும் ஒரு கிராம் ரூ200 குறைந்து ரூ.14,120க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.
