இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் விதமாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.71.840-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தையும், தமிழர்களையும் பிரித்து பார்க்க முடியாது. வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் தங்கத்தின் பயன்பாடு நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ளது. அதனை மிகமுக்கிய சேமிப்பாக பார்க்கும் மனோநிலையும் நம்மிடையே உண்டு. அதனால் தான் வேறெவரைக் காட்டிலும் தமிழர்கள் அதிக அளவு தங்கம் வாங்கி குவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்றுகாலை முதல் ஆறுதல் தரும் விதமாக சரிவை சந்தித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,040-க்கு விற்பனையாகி வந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,130-ஆக இருந்தது.

இந்நிலையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.71.840-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version