ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற INDIA TODAY சார்பில் நடைபெற்ற ‘TAMIL NADU ROUND TABLE’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது அதை காரணம் காட்டி வாக்கு சேகரிக்க உள்ளோம். எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றி பெறும். 200 தொகுதியை தாண்டி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி அரசியலைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார். நானும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கிறேன். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது. திமுக காங்கிரஸ் இடையே பிரச்சனை என்பது திட்டமிட்டு பரப்பப்படுகிறது. எங்களுக்குள் எதுவும் குழப்பம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வரின் முடிவு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் மேலிடம் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. முன்னதாக, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தியதாக கூறப்படும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version