Close Menu
    What's Hot

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு» 9,801 பேருக்கு அரசுப் பணி!. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
    தமிழ்நாடு

     9,801 பேருக்கு அரசுப் பணி!. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

    Editor web3By Editor web3February 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    govt jobs stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழக அரசின் பல்வேறு தெரிவு முகமைகள் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள். இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ‘தேர்வுக்களம்’ என்ற புதிய கைபேசி செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

    இந்தச் செயலி மூலம் டிஎன்பிஎஸ்சி மட்டுமல்லாது, ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஒரே இடத்தில் இலவசமாகப் பெற முடியும். மக்களுக்கு அரசுச் சேவைகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 புதிய மின்-சேவைகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு அலையாமல் இணையம் வழியாகவே சான்றிதழ்களைப் பெற முடியும்.

    அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்: சென்னை செனாய் நகரில் ரூ.62.50 கோடி மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பயிற்சி மையக் கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அண்ணா நிர்வாகப் பணியாளர் குடியிருப்பு: 3.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகில் அதிக காடுகள் உள்ள நாடு எது?. டாப் 10ல் இடம்பிடித்த இந்தியா!.
    Next Article தேர்தல் தோல்வியால் விரக்தி!. வாக்காளர்களுக்கு கொடுத்த பணம், குக்கரை திருப்பி கேட்ட காங்கிரஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.