ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரியில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதுவரை 18% ஆக இருந்த வீட்டு உபயோக பொருட்களின் மீதான வரியை குறைத்து சீர்த்திருய்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் மீதான தனது ஜிஎஸ்டி வரி 18% இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ருஜ்.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275 க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690ல் இருந்து ரூ.650 ஆக விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.