Close Menu
    What's Hot

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!
    தமிழ்நாடு

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    Editor web3By Editor web3February 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tn budget GST
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி என்றும் மேலும், 11.15 சதவீதம் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    பட்ஜெட் தாக்கலின்போது, புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது. ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது. பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது. பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது. பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது என்றார். 

    இடைக்கால பட்ஜெட்டில் வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்ட போதும் 41% ஆக தொடரும் என அறிவித்தது. அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் கூட நிலை மாறவில்லை. தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 4.07% ஆக குறைக்கப்பட்டதால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    0.44% மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 16-ஆவது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி இருக்கிறது. செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது.

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்படுகின்றன.

    மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள். ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவை. மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது.

    நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி. நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியாக இருக்கிறது. 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.
    Next Article பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.