டித்வா புயல் காரணமாக இன்று எங்கெல்லாம் கனமழை, அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் அதிகனமழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.