Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    தமிழ்நாடு

    சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் தாய்மார்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய் தானா என்பதை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், சாலை சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை. பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகள் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

    வெயில், வாகன சத்தத்துக்கு கூட அந்தக் குழந்தைகள் கண்முழிப்பது இல்லை. அதனால் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருக்கிறதா?, வேறு மருந்துகள் அல்லது ஆல்கஹால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா? பின்னணியில் செயல்படுவோர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுசம்பந்தமாக அளித்த மனுவை பரிசீலித்து, குழந்தைகளை மீட்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.

    மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே மாதத்தில் 32 படங்கள் ரிலீஸ் – அசத்தும் தமிழ் சினிமா
    Next Article “தனிக்கட்சி தொடங்குவேன் என எந்தச் சூழலிலும் சொல்லவில்லை” – ஓபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    February 19, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.