Close Menu
    What's Hot

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வழக்கு தொடர்ந்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை
    தமிழ்நாடு

    வழக்கு தொடர்ந்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mduu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுநல வழக்கு மூலம் பணம் பறிக்கும் நிலையை அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    காரைக்குடியை சேர்ந்த பூல்பாண்டி, கடந்த 2021-ல் காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

    அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அது போல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் போக்கு.

    ஆகவே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது. பொதுநல வழக்கை சிலரின் தனிப்பட்ட நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது நீதிமன்றத்திற்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அது போன்ற நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படாது.

    அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்பப் பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். பொதுநல வழக்கு தொடர்பவர்கள் முறையான காரணம் இன்றி மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும். மனுதாரர் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?. 15 வினாடிகளில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டிப்ஸ்!.
    Next Article தேவ்தத் படிக்கல் சதம்… கர்நாடகாவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு
    Editor TN Talks

    Related Posts

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    February 17, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.