Close Menu
    What's Hot

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!
    தமிழ்நாடு

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    Editor web3By Editor web3February 20, 2026Updated:February 20, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    K.N. Nehru
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்பதுரை கடந்த மாதம் 7-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

    Minister K.N. Nehru

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.

    MK Stalin and Annamalai

    தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?

    உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

    2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது.

    salem vijay

    நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஊழல் மலிந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத தி.மு.க. அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?
    Next Article விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!
    Editor web3
    • Website

    Related Posts

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    February 20, 2026

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    February 20, 2026

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    Trending Posts

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    February 20, 2026

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    February 20, 2026

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    February 20, 2026

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    February 20, 2026

    மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.