Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மும்பைக்கு வரேன்; முடிந்தால் என் காலை வெட்டி பாருங்கள்!. ராஜ் தாக்கரேவுக்கு அண்ணாமலை சவால்!
    தமிழ்நாடு

    மும்பைக்கு வரேன்; முடிந்தால் என் காலை வெட்டி பாருங்கள்!. ராஜ் தாக்கரேவுக்கு அண்ணாமலை சவால்!

    Editor web3By Editor web3January 12, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    122490433 annamal3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மும்பையின், எம்.என்.எஸ் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்ணாமலையின் மும்பை யாத்திரை குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என்றும் மும்பை வருவது உறுதி என்றும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பராசக்தி படம் முரசொலி போல் களத்தில் இருக்கும் என்று கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார். நியாயமாக பேசிய கமல்ஹாசன் கருத்தை ஏற்கிறேன். இந்த படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை சொல்லி இருக்கிறது. 1965ம் ஆண்டு இந்தி திணிக்க காங்கிரஸ் கட்சி செய்த அடாவடித்தனத்தை படம் தெளிவாக சொல்லி இருக்கிறது. பராசக்தி படக்குழுவிற்கு வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன்.

    எங்கே ஆப்பு செய்தார்கள் என்று திமுகவினர் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இலங்கையில் இன படுகொலை செய்தனர். 2026ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் யாரொல்லம் கூட்டணிவைக்கிறார்களோ பராசக்தி முரசொலியாக பரவட்டும். தீ பரவட்டும் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். வீட்டில் தீ பிடித்தால் வீட்டுக்காரர்களை சுடும். திமுக என்ற வீட்டில் தீ சுட்டட்டும். காங்கிரசுடன் கூட்டணி வைத்து இருப்பவர்களுக்கு தீ பரவட்டும். ஒரு வாரத்தில் பராசக்தி படம் குறித்து முதலமைச்சர் கருத்து சொல்வார் என்று காத்து கொண்டு இருக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அந்த வாக்குசாவ்டி பக்கம் போய் ஒட்டு போட்டு விடாதீர்கள். என்ன அநியாயம் செய்து இருக்கிறார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார் அண்ணாமலை.

    ஆதித்திய தாக்ரே, ராஜ் தாக்ரே, உத்தவ் தாக்ரே ஆகியோர் கோபத்தை சம்பாதித்து இருக்கிறேன். விவசாய குடும்பத்தை சார்ந்த என்னை மேடை போட்டு தாக்கி பேசுகின்றனர். நான் வளர்ந்து விட்டேனா மும்பையில் கூட்டம் போட்டு திட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டேனா என்று தெரியவில்லை. சிவசேனா பத்திரிக்கையில் காலை வெட்டுவேன் என்று மிரட்டி உள்ளனர். மும்பைக்கு வருவேன் முடிந்தால் வெட்டி பார். மிரட்டல் உருட்டலுக்கு பயந்து இருந்ததால் கிராமத்தில் தான் இருக்க வேண்டும்.

    சிபி ஐ விசாரணைக்காக விஜய் சென்று உள்ளார். சம்மன் தருவதால் யாரும் குற்றவாளி ஆக முடியாது. இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஜனநாயகன் படத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் நானும் ஒருவன். திரைப்படம் ஒரு நடிகர் மட்டுமல்ல. லட்சக்கணக்கானவர்கள் பின்னால் உள்ளனர். எல்லா படமும் கடந்து வரக்கூடியது தான். சில காட்சிகள் எடுக்க சொல்வது. ஜனநாயகன் படத்தை பார்க்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும். பராசக்தி படத்தை பார்த்து கருத்து சொல்லி இருக்கிறேன். ஜனநாயகன் படம் வர வேண்டும் என கருத்து இருக்கிறேன்.

    ஆட்சிக்கு நிறையும் குறையும் 50 சதவீதம் இருந்தால் ஓகே என்பார்கள். எல்லா மக்களின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்ய முடியாது. குறைகள் அதிகமாகவும் நிறைகள் குறைவாகவும் உள்ள ஆட்சியாக பார்க்கிறேன். ஆனால் உணமையாக கருத்து தேர்தலில் மக்கள் ஏஜமான் ஒட்டு முலம் தெரிவிப்பார்கள். மார்க் போட தகுதியானவர்கள் மக்கள் தான்.

    திமுக ஊழலை மக்கள் பார்க்க வேண்டும். அமலாக்கத் துறை கே.என்.நேரு மீது குற்றம் சொல்லி இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு போட்டதாக தெரிகிறது. ஊழல் என்பது சாதாரண மக்களுக்கு தெரிந்துவிட்டது.

    டிடிவி தினகரன் யாரை சந்தித்தார் என்று தெரியாது. என்னுடைய கருத்தில் மாற்றம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும். வரும் தேர்தல் சாதாரணமாக இருக்காது. வித்தியாசமான தேர்தல். 4 முனை போட்டி இருக்க கூடிய தேர்தல். சீமானை யாரும் எளிதாக எடை போட வேண்டாம். கொள்கைக்காக தனித்து துணிச்சலாக போட்டியிடுகிறார்.

    விஜய் ஸ்ட்ராங்காக களத்தில் வந்து உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகவும் அனுபவமாகவும் மோடி ஆசிர்வாதம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளில் பழையான கட்சி திமுக. 4 முனை போட்டி வலிமையாக இருக்கும். ஒரு ஓட்டு கூட முக்கியம். கூட்டணி வாய்ப்பு கிடைக்கும் போது பலப்படுத்த வேண்டும். கூட்டணி பலமாக இல்லையா என்றால் இந்தியா கிரிக்கெட் அணி மாதிரி வலிமையாக உள்ளது. நல்ல பிளேயர் கிடைக்கும் போது சேர்த்து கொண்டு செல்ல வேண்டும். 4 முனை போட்டியில் இன்னும் வலிமையாக இருக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட 11 பேர் மட்டும் போதாது பார்க்க ஆட்களும் வேண்டும்.

    திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற ஒத்த கருத்து உள்ளவர்கள் எல்லாரும் இணைய வேண்டும். முரண்பாடு உள்ளவர்கள் இணைவதையும் மக்கள் பார்க்கின்றனர். தேர்தலில் நான் கோச், கேப்டன் இல்லை. பார்வையாளர். கோச், கேப்டன் பலர் உள்ளனர். அவர்கள் முடிவு செய்வார்கள். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலம் பதில் சொல்லும் காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV C-62 ராக்கெட்!. இதன் மூலம் என்ன பயன்?.
    Next Article 1964-ல் இதே நாள்!. தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்!. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு சாதனையா?
    Editor web3
    • Website

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.