Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மத்தவங்களின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல முடியாது!. பிரேமலதா காட்டம்!.
    தமிழ்நாடு

    மத்தவங்களின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல முடியாது!. பிரேமலதா காட்டம்!.

    Editor web3By Editor web3February 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Premalatha Vijayakant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனவரி 26 குடியரசு தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது, ஆனால் தொடர் சுற்றுப்பயணம் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, நான்காவது கட்ட சுற்றுப்பயணம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. சென்ற அனைத்து இடமும் மக்களின் மிகப்பெரிய ஆரவாரம் வரவேற்பு மிகப்பெரிய எழுச்சியாக இருந்துள்ளது.

    நிர்வாகிகளுடைய சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதை சந்தோஷமான விஷயம் என்றால், தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து பூத் கமிட்டிகளையும் நிறைவு செய்து பிஎல் 2 படிவத்தை அனைத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் பூத் முகவர்கள் அமைப்பு வழங்கி மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.

    தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் இதுபோன்ற பூத் கமிட்டிகளை அமைத்து தயார் நிலையில் வைப்பது கடினம் ஆனால் தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் அனைத்து இடங்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்.

    மிக விரைவில் நீங்கள் எதிர்பார்ப்பது வரும்… வெகு விரைவில் தேமுதிக விருப்ப மனு, வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்க உள்ளது. உரிய நேரத்தில் விருப்ப மனு மாவட்ட செயலாளர் அனைத்தையும் அறிவிக்க இருக்கிறோம். பிப்ரவரி 12 தேமுதிக கொடி நாள் அன்று தமிழக முழுவதும் மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கின்றோம்.

    பொறுமையாக யோசித்து எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும், எது நல்லது என முடிவு எடுப்போம். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை வாக்காளர் பெயர்கள் அதேபோன்று தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் இன்னும் கூட்டணி இறுதி முடிவு செய்யவில்லை. மாவட்டச் செயலாளருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளோம், அவர்களுடைய விருப்பம் தொண்டர்களின் விருப்பம் அனைத்தையும் சேர்த்து ஒரு மகத்தான வெற்றி கூட்டணி அறிவிப்போம்.

    திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தார். அதை தெரிந்துதான் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என எண்ணுகிறேன் முடிவு அவர்களது விருப்பம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்விக்கு,

    மத்தவங்களின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல முடியாது தேமுதிகவின் நிலைப்பாடு மட்டும் தான் நான் பதில் சொல்ல முடியும். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் தேமுதிகவிற்கு தோழமைக் கட்சிகள் தான். விஜயகாந்த் நினைவு தினத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் வந்தார்கள். அந்த வகையில் மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தேமுதிகவிற்கு தோழமைக் கட்சிகள் தான்.

    தோழமையோடு இருப்பது ஒன்று, அரசியல் நிலைபாடு என்பது எங்கள் கட்சியின் விருப்பம் என்ன என்பதை எடுக்க வேண்டியது நிலை. தேமுதிகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்சியினுடைய அனைவருடைய விருப்பத்தை ஏற்று அதன் அடிப்படையில் முடிவு இருக்கும்.

    ஜனவரி 26 குடியரசு தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு நடக்கக்கூடிய அணி வகுப்புகளை பார்ப்பதற்காக கலந்து கொள்வதற்கு தேமுதிகவிற்கு கட்டாயம் வரவேண்டும் என அழைப்பு வந்தது. ஆனால் தொடர்ந்து சுற்றுப்பயணம் அறிவித்திருந்ததால் என்னால் அந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

    ஒருத்தர் பேசினால் அவர்களுடன் கூட்டணி அல்லது ஒருவர் திட்டினால் அவர்களுடன் கூட்டணி இல்லையா என்பது இல்லை. பெண் தலைவர், பெண் தலைவிகளை மதிக்கிறேன் அது தமிழிசையாக இருந்தாலும், கனிமொழியாக இருந்தாலும் மதிக்கிறேன். அவர்களுடன் நான் தோழமையுடன் தான் இருக்கிறேன் அவர்களும் என்னுடன் தோழமையுடன் தான் இருக்கிறார்கள்.

    எங்கள் கட்சியினர் யாரை விரும்புகிறார்களோ அவருடன் தான் கூட்டணி அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.  மற்ற கட்சிகள் பேசினால் கூட்டணி பேச்சுவார்த்தை, தேமுதிக பேசினால் மட்டும் தனி ஒரு பார்முலா வைத்துக்கொள்கிறார்கள் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடு முழுவதும் பிப்.7 முதல் ஸ்டிரைக்!. உபர், ஓலா, ராபிடோ ஓட்டுநர்கள் அறிவிப்பு!
    Next Article விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கட்டும்!. EPS பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.